shalu shammu

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்த ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் உன்னை இப்படி இழந்துவிடுவேன் என நினைக்கவே இல்லை. உன்னிடம் நான் கடைசியாக பேசிய போது உன் கணவர் தொடர்பாக தவறான முடிவை எடுக்க வேண்டாம் என எவ்வளவோ கூறினேன். ஆனால், நீ கேட்கவில்லை. நீ இப்படி செய்துவிடுவாய் என எனக்கு தெரிந்திருந்தால் உன்னை தடுக்கும் முயற்சியை நிறுத்தியிருக்க மாட்டேன். உன்னை உழந்துவிட்டோம்’ என பதிவிட்டுள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக நம்பப்படுகிறது. போலீசார் உரிய விசாரணை செய்தால் உண்மை வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

insta

Leave a Reply

Trending