[prisna-google-website-translator]

சித்ராவுக்கு அந்த பிரச்சனை இருந்தது – நடிகை சரண்யா பரபரப்பு தகவல்

saranya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன் நடித்தவர்கள், தோழிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சரண்யா கூறிய போது ‘ 2 வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு செல்லும் போது சித்ராவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர் என்னிடம் பேசியது இல்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன். அப்போது தனது திருமணம் மற்றும் புதிய வீடு பற்றியெல்லாம் பேசினார். அவருக்கு பணப்பிரச்சனை இருந்தது. அவரது பிரச்சனையை யாரிடமாவது பகிர்ந்து முடிவை கண்டிருக்கலாம். அவரின் முடிவு எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply