போலீஸ் ஸ்டேஷனில் டிக்டாக் புகழ் சூர்யா – வைரல் புகைப்படம்

suriya

suriya

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புகழடைந்தவர் சூர்யா. டிக்டாக்கில் ரவுடி பேபி என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த இவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. டிக்டாக் தடை விதிக்கப்பட்ட பின் அவரை பற்றிய செய்திகள் வெளியாகவில்லை.

இந்நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஸ்பா சென்டர்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, டிவிஎஸ் டோல்கேட் அருகேயுள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் உள்ள மசாஜ் செண்டரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது அங்கு டிக்டாக் புகழ் சூர்யாவும் அங்கு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரோடு சேர்த்து 13 பெண்களை போலீசார் மீட்டனர். அங்கு விபச்சாரம் நடத்தியதாக ஸ்பா உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்களுடன் சூர்யா அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

suriya

Leave a Reply