பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன் நடித்தவர்கள், தோழிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது உடலை இன்று மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகும் என்றாலும் இது தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. போலீசாரும் இதை உறுதி செய்துள்ளனர். ஆனாலும், அவர் ஏன் தற்கொலை செய்தார் என்கிற ரீதியில் போலீசார் விசாரணையை செய்து வருகின்றனர்.