செய்திகள்
ரஜினி பிறந்த நாள் ட்ரீட்.. சன் பிக்சர்ஸ் தரப்போகும் இன்ப அதிர்ச்சி….

நடிகர் ரஜினி தற்போது அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.
வருகிற 12ம் தேதி அதாவது நாளைக்கு ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவர் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளதால் அவரின் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகத்தினர் ரஜினியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்ட ‘அண்ணாத்தே’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.