
அஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் விஷ்ணு வர்தன் ஈடுபட்டுள்ளார். ஆனால், அஜித்தின் கடைக்கண் பார்வை அவருக்கு கிட்டவில்லை. எனவே, பாலிவுட்டிற்கு சென்று ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அடுத்த படம் அஜித் நமக்கு கொடுப்பார் என காத்திருந்தார். ஆனால், இடையில் சுதா கொங்கராக புகுந்து விட என்ன செய்வதென்று யோசித்து வருகிறாராம். மேலும்,ஒரு வேளை சுதா கொங்கரா விலகிவிட்டால் அஜித் நம்மை அழைப்பார் என அவர் காத்திருக்கிறாராம்..





Leave a Reply