நடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்!

chitra
chitra

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பான 250 பக்க விசாரணை அறிக்கையை ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ., நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் குடும்பத்தினர், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவருடன் நடித்த சக கலைஞர்கள், அக்கம் பக்கத்தார் என 4 கட்டங்களாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார். 5ஆம் கட்டமாக இன்று நடிகை சித்ராவிடம் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய ஆனந்த் என்பவரிடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார்.

அவரிடமும் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சித்ரா தற்கொலையில் வரதட்சணைக் கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று ஆர்டிஓ., விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.

ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ மேற்கொண்ட விசாரணை அறிக்கை 250 பக்கங்களாக பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சனிடம் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

Leave a Reply