
ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற டாக் ஷோவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் தனது பெற்றோர் இறந்து விட்டதாகவும், தனக்கு ஏழு சகோதரிகள் உள்ளதாகவும் சகோதரிகளை தான் ஆட்டோ ஓட்டி, அந்த வருமானத்தை வைத்து தான் அவர்களை காப்பாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ஏழு சகோதரிகள் பராமரிக்க வேண்டி இருப்பதால் இந்த வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை எனவும் அவரது கஷ்டத்தை கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட சமந்தா அந்த மேடையிலேயே வைத்து அவருக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகவும் அதை வைத்து டிராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்து ஊக்கப்படுத்தி உள்ளார்.
மேலும், அவர் சொன்னது போலவே தற்போது 12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை அந்த ஆட்டோ ஓட்டும் பெண்மணிக்கு பரிசாக அளித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் சமந்தாவின் இந்த சேவை பாராட்டுக்குரியதாக வலம் வருகிறது.
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply