
கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
90களில் இந்தித் திரையுலகை ஆட்டுவித்த நதிம் – ஷ்ராவன் இரட்டையர்களில் ஒருவரான ஷ்ராவன் ராத்தோட் -க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்த நிலையில் கொரோனோ தொற்று அவருடைய உடல்நலத்தை மேலும் கடுமையாகப் பாதித்துள்ளது. மருத்துவமனையிலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.
ஆஷிக்கி, சாஜன், தில் ஹே ஹி மாந்தா நஹின், ராஜா இந்துஸ்தானி, சடக், தீவானா, பூல் அவுர் காண்டே, தட்கன், பர்தேஸ் போன்ற படங்களில் சூப்பர்ஹிட் மெலோடி பாடல்களை தந்தவர்கள் நதிம்-ஷ்ராவன். 90களின் பாலிவுட் இசை சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள்.
குமார் சானு, அல்கா யாக்னிக், உதித் நாராயண் போன்ற பாடகர்களும் இவர்கள் இசையினால் பிரபலமானவர்கள் ஆவார்கள். ஷ்ராவன் ராத்தோட் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply