கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் பிரபல நடிகையின் கணவருமான ராமு கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ராமு. இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை என அழைக்கப்படும் நடிகை மாலஸ்ரீயின் கணவர் ஆவார்.
ஏகே 47, லாக்அப் டெத், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார் ராமு. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ராமு கொரோனாவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.
இந்த தகவலை கன்னட பிலிம் அகாடமியின் தலைவரும் அவரது நெருங்கிய நண்பருமான சுனில் புரனிக் இன்று காலை தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ராமுவின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
மேலும் “அவர் தயாரிப்பாளர்களின் அரிதான ஒருவராக இருந்தார், அவர் தனது சொந்த அடையாளத்தை நிறுவியதோடு மட்டுமல்லாமல், அவர் தயாரிக்கும் திரைப்படங்கள் தங்களின் பெயரில் இருப்பது உறுதிசெய்தார். அவரது திரைப்படங்கள் ஒரு ஹீரோ, இயக்குனர் அல்லது இசை இயக்குனரின் பெயரைக் காட்டிலும் அவரது பெயரில் இருந்தன.
அந்த பெயர் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை ஈர்த்தது.
“அவர் ஆடம்பரமாக செலவழித்தார். அவர் கன்னட சினிமா போன்ற சிறிய மார்க்கெட்டுக்கு 90களிலேயே ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்ததால் கோட்டி ராமு என்றும் அழைக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
அவரது மறைவுக்கு கன்னட சினிமா நட்சத்திரங்கள் பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், கன்னட சினிமாத்துறையில் தனக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர்கள் ஒருவரான ராமு சார் இப்போது இல்லை என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் ஸ்ரீமுரளி பதிவிட்டுள்ள டிவிட்டில் இது ரொம்பவே அதிர்ச்சியளிக்கிறது. எனது ஆரம்பகால தயாரிப்பாளர்களில் ஒருவரும், அருமையான பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் ராமு சார், அதைவிட ஒரு நல்ல மனிதர். மல்லக்காவும் குழந்தைகளும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
கன்னட சினிமாத்துறை இன்று ஒரு அருமையான தயாரிப்பாளரை இழந்து விட்டது. நான் மிஸ் பண்ணுவேன் சார்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.