[prisna-google-website-translator]

கே.வி ஆனந்த் மறைவு: ரஜினி, கமல், தனுஷ், ஜீவா ட்வீட்டரில் இரங்கல்!

kv anand
kv anand

கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்று வந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக இயக்குநர் கே.வி.ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.
கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல் நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானம் கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

ambulance
ambulance

மின்மயானத்துக்குச் செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டின் வாசலிலேயே ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நின்றது. அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

kamal 1
kamal 1

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ”பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த், தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி”. என பதிவிட்டுள்ளார்.ரஜினி இரங்கல்நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், ”மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வெளியிட்ட இரங்கல் செய்தி : இன்றைய காலை பொழுது என்னை நடுங்க வைத்தது. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய காதல் தேசம் படம் தான் அவருக்கு ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுக படம்.

thanush as
thanush as

துடிப்பான, தொழில் பக்தியுள்ள அந்த இளைஞர் பிற்காலத்தில் பெரிய அளவில் இந்திய சினிமாவில் புகழ் பெறுவார் என்று அன்றே நான் கணித்து சொன்னேன். நீங்கள் இவ்வளவு வேகமாக விடை பெற்றிருக்க கூடாது. மிகவும் வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்…
ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்”.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன். அயன், கோ, காப்பான், மாற்றான், அனேகன், கவன் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கியவர். அதிகம் பேசாமல் தன் படங்களை மட்டுமே பேசவைத்தவர்.

தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தவர். நண்பர்கள் வட்டாரம் இவருக்கு பெரியது. தமிழ் சினிமாவை ஆங்கிலப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லும் இயக்குனர்களில் இவரின் பங்கு அதிகம் என்றால் அது மிக இல்லை என்றே அனைவரும் சொல்வார்கள்.

அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தாருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில், “மென்மையான கனிவான, நேர்மையான மனிதர் காலமானார். வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி நிறைந்த இனிமையான மனிதர் இன்று இல்லை. மிக விரைவாகவே சென்று விட்டீர்கள் சார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply