
பிரபல நடிகரின் மகனுடன் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார் பிக் பாஸ் ஜூலி. புகைப்படம் ஒன்றும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் மானம் மரியாதை அனைத்தையும் எடுத்துக் கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி சமூக வலைதள பக்கங்களில் எதை பதிவிட்டாலும் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்ப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் அதை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றி விதவிதமான போட்டோஷூட் உள்ளிட்டவைகளை நடத்தி அந்த புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
மேலும் நிலை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் போட்டியாளரான ஷாரிக்குடன் காதல் வயப்பட்டு அவருடன் ஊர் ஊராக சுற்றி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஷாரிக் தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் பிரபல நடிகர் மற்றும் நடிகையான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related
Source: Dhinasari News – Vellithirai News