1980களில் தமிழ் சினிமாவில் நடந்த ஒரு புரட்சி என்றே கூறலாம் ஒருதலை ராகம் திரைப்படத்தை. இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் அப்படத்தை கொண்டாடினர். அப்படத்தின் மூலம் தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் டி.ராஜேந்தர்.
அப்படத்தை இயக்கி, தயாரித்தவர் இ.எம் இப்ராஹிம். படத்தின் கதையுடன் சுற்றித்திருந்த டி.ஆர்-க்கு தயாரிப்பாளராக இப்ராஹிம் கிடைத்தார்.
ஒருதலை ராகம் படத்தை டி.ஆர். இயக்கினாலும் தயாரிப்பாளருடனான மோதலால் படத்தில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. பட வாய்ப்பு தரும்போது நான் தான் படத்தை இயக்குவேன், கதை, வசனம் உன் பொறுப்பு என்று தயாரிப்பு இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு டி.ஆர்.தான் முழுப் படத்தையும் இயக்கினார் என கூறப்பட்டு வருகிறது.
படம் வெளியானபோது தயாரிப்பு, இயக்கம் இ.எம். இப்ராஹிம் என்றுதான் இருந்தது. எனினும் பல பிரச்னைகள் தாண்டி படம் தாமதமாக வெளியானாலும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைத தயாரித்த இப்ராஹிம் தற்போது காலமானார்.
அடுத்தடுத்து திரைத்துறையினர் மறைந்து வருவதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இ.எம். இப்ராஹிம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.