கொரோனா: பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

joker thulasi
joker thulasi

பிரபல பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் காலமானார்.

இவர் தேவராஜ்-மோகன் இயக்கி 1976ஆம் ஆண்டு வெளியான “உங்களில் ஒருத்தி” படத்தில் அறிமுகமானார். சென்னையில் உள்ள கண்மணி நாடகக் குழுவின் முதல் நடிகர் இவர்.

மேலும் இவர் பல ஆண்டுகளாக தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் என படங்களில் நடித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டில் வெளிவந்த திருமதி பழனிச்சாமி படத்தில் இவரது நடிப்பு எல்லோராலும் வெகுவாக பாராட்டப்பட்டது . கோலங்கள் , வாணி ராணி , கேளடி கண்மணி , நாணல் அழகு உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார்.

joker thulasi 1
joker thulasi 1

இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா 2ஆவது அலை மிகத்தீவிரமாக உள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட நடிகர் ஜோக்கர் துளதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply