
திரையுலக துணை நடிகர் கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்தார்.
நெல்லை வள்ளியூர் வேப்பிலான்குளத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகர் நெல்லை சிவா. இவர் இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பலரைப் பெற்றிருந்தார். சிறந்த குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் பெயர் பெற்றவர். நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப் பட்டுவருகின்றன.
Related
Source: Dhinasari News – Vellithirai News