தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் சமீபத்தில் அரசியலில் நுழைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்று வந்ததற்கு பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் நல்லபடியாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்த கமலஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிறேன் என மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்ட மக்கள் நீதி மையம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் வெற்றியின் விளிம்பு வரை சென்று மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த ஒரு தேர்தலோடு மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்த முன்னணி பிரமுகர்கள் பலரும் விலகி விட்டனர்.
இதனால் கமல்ஹாசனுக்கு அரசியல் வரவில்லை என ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தபோது எப்படி கிண்டல் செய்தார்களோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் கமலஹாசனை இணையதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
சினிமாவில் திரௌபதி என்ற சாதிப் படத்தை கொடுத்து பெரும் சர்ச்சையில் மாட்டிய மோகன் என்பவர் சர்ச்சை கருத்து ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் கொள்கை தெளிவு இல்லாத அரசியல் எதுக்கு எனவும், சினிமாவில் நீங்க ஒரு சரித்திரம், பேசாமல் அதையே தொடருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னையில் ஒரு பெரிய படப்பிடிப்பு தளம் இல்லை, அதை உருவாக்கினாலே உங்களை காலத்திற்கும் பாராட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு கமல் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.