எம்.ஜி.ஆர் படத்தை போட்ட தியேட்டர் – வந்தது எத்தனை பேர் தெரியுமா?..

கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க தற்போதுதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சில ஊர்களில் சில தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில், சொற்பமான ரசிகர்களே வந்து படம் பார்க்கின்றனராம். பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்படவே இல்லை.

இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் ஒன்றை திரையிட்டுள்ளனர். அதை பலரும் பார்க்க வருவார்கள் என காத்திருந்த போது, ஒரு மூதாட்டி மட்டும் பேரனை அழைத்துக்கொண்டு படத்தை பார்க்க வந்துள்ளார்.

வழக்கமாக 10 பேருக்கு கீழ் ரசிகர்கள் படம் பார்க்க வந்தால் படத்தை திரையிடாமல் டிக்கெட் பணத்தை திருப்பிக்கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஆனால், தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் படம் பார்க்க வந்த பாட்டிக்காக படத்தை ஒளிபரப்புங்கள் என தியேட்டர் அதிபர் கூறிவிட்டாராம்.


Comments

Leave a Reply

%d bloggers like this: