
நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு.
அரசியல்வாதிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். தற்போது நடிகர் வெங்கட் உயிரிழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொரனோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் வெங்கட் யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்தார். மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹர்பஜன் சிங், லாஸ்லியா இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள ஃபிரண்ட்ஷிட் படத்திலும் வெங்கட் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் இவர் அப்பா வேடங்களிலும் சில படங்களில் வில்லன் வேடங்களிலும் நடிப்பதில் ஆர்வம் உடையவர்.
Related
Source: Dhinasari News – Vellithirai News