சூரரைப்போற்று படம் அட்டகாசம் – பாராட்டிய இயக்குனர்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. 

இப்படத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட வசனங்களை புரமோ வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. 

இந்த திரைப்படம் திரைத்துறை பிரபலங்கள் சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் இப்படம் பற்றிய தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்தை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் ‘ இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்தில் இடம் பெற்ற ஓவ்வொரு கதாபாத்திரமும் மனதை தொடுகிறது. சுதா கொங்கராவின் கடின உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஜி.வி.பிரகாஷின் இசை ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும்’ என குறிப்பிட்டுள்ளார்.

 


Comments

Leave a Reply

%d bloggers like this: