கொரோனா: பிரபல பாடகி உயிரிழப்பு! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

thabu misra - 1

ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம்வந்தவர் தபு மிஷ்ரா. இவர் இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது இனிமையான குரலால் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர்.

இந்த நிலையில் தபு மிஷ்ராவுக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவரது ஆக்சிஜன் அளவு 45க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 100% வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது, தபு மிஷ்ராவுக்கு ரத்த கொதிப்பு அல்லது வேறு வகையான இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் குணமடைந்து விடுவார் என குடும்பத்தினர் நம்பிக்கையில் இருந்தனர்.

tabhu - 2

எனினும் அவருக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார்.

இது தபு மிஷ்ராவின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply