![லாரி மோதி கடும் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! 1 Kathi mahesh - 1](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/06/e0aeb2e0aebee0aeb0e0aebf-e0aeaee0af8be0aea4e0aebf-e0ae95e0ae9fe0af81e0aeaee0af8d-e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb2-12-13-13.png?resize=640%2C361&ssl=1)
பிரபல பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகர் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவரும், நடிகர் மற்றும் சிறந்த திரைப்பட விமர்சகருமான நடிகர் கத்தி மகேஷ் நேற்று இரவு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
நேற்று இரவு காரில் ஹைதராபாத்தில் இருந்து தனது சித்தூரில் இருக்கும் தனது வீடிற்கு சென்று கொண்டிருக்கும் போது, கத்தி மகேஷ் மீது, தீடீரென லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
![லாரி மோதி கடும் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! 2 Kathi makesh - 2](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/06/e0aeb2e0aebee0aeb0e0aebf-e0aeaee0af8be0aea4e0aebf-e0ae95e0ae9fe0af81e0aeaee0af8d-e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb2-12-13-1.png?resize=640%2C394&ssl=1)
தற்போது, நெல்லூரில் உள்ள தனியார் மருதுவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை குறித்த முழு தகவலும் வெளியாகாத நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு, குறும்பட இயக்குனரக பணியாற்றிய இவர், ஹ்ருதேயா காலேயம் என்ற படத்தில் நடித்துள்ளார். 2015 ஆம், ஆண்டு பெசராட்டு என்ற படத்தை இவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.