பிரபல மலையாள திரைப்பட இயக்குனரும், புகைப்படக் கலைஞருமான ஆண்டனி ஈஸ்ட்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 75.
1981-ம் ஆண்டு இணையை தேடி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆண்டனி ஈஸ்ட்மேன். இந்த படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
இது நடிகர் சில்க் ஸ்மிதாவின் லான்ச் பேடாகவும் இருந்தது. வச்சால் (1981), மற்றும் வர்ணதேரு (1999) உள்ளிட்ட திரைப்படங்களை ஆண்டனி இயக்கியுள்ளார். மேலும் ராச்சனா (1983), ஈ லோகம், இவிடே ஏ தீராது ( 1985), குரே மனுஷ்யர் (1985), மானிகியன் (2005), மற்றும் க்ளைமாக்ஸ் (2013) போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.
பி ஜி விஸ்வம்பரன் இயக்கிய பார்வதி பரிணயம் (1995) திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஆண்டனி இருந்தார்.
திரிசூரில் உள்ள சோவனூரில் முரிங்கதேரி குரியகோஸ் மற்றும் மார்த்தாவின் மகனாக ஆண்டனி பிறந்தார். கொச்சியில் ஒரு ஈஸ்ட்மேன் ஸ்டுடியோவைத் திறந்து ஒரு ஃப்ரீலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
இவருக்கு மேரி என்ற மனைவி கஞ்சி மற்றும் மினி என்ற குழந்தைகள் உள்ளனர். ஆண்டனியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச் சடங்குகள் தும்பூரில் உள்ள தேவாலயத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.