தல சொல்லியும் அடங்கலையா நீங்க? சாமியாடுபவரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்! வைரல்!

valimai - 1

வலிமை திரைப்படம் தொடர்பாக சாமியாடுபவரிடம் அஜித் ரசிகர்கள் குறி கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அஜித் ரசிகர்களை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்க விடாமல் செய்யும் ஒற்றை வார்த்தை வலிமை அப்டேட்.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத்.

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

எப்போதோ,படப்பிடிப்பு முடிந்து வலிமை படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக படம் தள்ளி போனது.

இதற்கிடையே, அஜித் ரசிகர்கள் வலிமை படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதாவது ஒரு தகவல் வராதா என தவம் கிடக்க தொடங்கினர்.

ஒருகட்டத்தில் அஜித் ரசிகர்கள் பலரிடமும் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் வீரர்கள் மொயின் அலி, அஸ்வின் என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காத ஆட்களே இல்லை என்று கூறலாம்.

இந்நிலையில்தான், வலிமைப் படம் தொடர்பாக அப்டேட் ஒன்றை அதன் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்தார். படத்தில் அம்மா பாசம் தொடர்பான பாடல் இடம் பெற்றிருப்பதாக அவர் கூறியிருந்தார். விரைவில் வலிமை திரைப்படத்தின் மோஷன்போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், சாமி ஆடும் நபர் ஒவரிடம் சிலர், ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்க என்று கூறுகின்றனர். சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

%d bloggers like this: