லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் எஸ்யூவி கார் வாங்கிய பிரபல நடிகர்!

Vicky kowsal - 1

பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்களில் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவியும் ஒன்று

உலக செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது இருக்கின்றது. இதற்கு, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவல் எஸ்யூவி காரில் இருக்கும் அதிகபட்ச சொகுசு மற்றும் பிரீமியம் தர வசதிகளே முக்கிய காரணமாகும்.

ஆமாம், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் எஸ்யூவி காரில் ஏராளமான சொகுசு வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவேதான் பணக்காரர்கள் மத்தியில் மட்டுமின்றி திரைப் பிரபலங்களின் விருப்பமான காராகவும் இது இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது.

இந்திய திரையுலகைச் சேர்ந்த ஓர் பிரபல நடிகர் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி காரை புதிதாக பயன்பாட்டிற்கு வாங்கியிருக்கின்றார். உரி திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விக்கி கவுசல், இவரே புதிய சொகுசு எஸ்யூவி காரை வாங்கியவர் ஆவார்.

actor - 2

கார் வாங்கியது குறித்த படங்கள், தகவல்களை அவர், அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

விக்கி கவுசல் வாங்கியிருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 2.40 கோடி தொடங்கி ரூ. 4.38 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒட்டுமொத்தமாக 8 விதமான வேரியண்டுகளில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் நம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, வெவ்வேறு விதமான சொகுசு அம்சங்களின் தொகுப்பாக இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பெரும்பாலான இந்திய நடிகர்கள் சொகுசு வாகன விரும்பிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு சற்று விதிவிலக்கற்றவராகவே பாலிவுட் திரையுலகைச் சார்ந்த விக்கி குஷாலும் இருக்கின்றார். விக்கி குஷாலும் சக நடிகர்களைப் போலவே சொகுசு கார்களைச் சேர்ப்பவராக இருக்கின்றார்.

இவரிடத்தில் பல்வேறு விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 போன்ற ஆடம்பர கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே கூடுதலாக புதியதாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவல் எஸ்யூவி காரை அவர் புதிதாக வாங்கியிருக்கின்றார்.

இதில், மற்றுமொரு சுவாரஸியம் என்னவென்றால் விக்கி குஷாலின் பெண் தோழியான கத்ரினா கைஃப்-ம் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் எல்டபிள்யூபி வெர்ஷன் காரை பயன்படுத்தி வருகின்றார்.

இவருக்கு போட்டியளிக்கும் வகையில் விக்கி கவுசல் புதிய கார் வாங்கியிருக்கின்றார். விக்கி கவுசல் புதிய காரை வாங்கியதற்கு சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply