சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
நடிகர் ஜோசப் விஜய்க்கு குட்டு கொடுப்பதுபோல் உத்தரவு கொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது.
வரி வருமானம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்சிக்கு முதுகெலும்பு; வரி என்பது கட்டாயமாக செலுத்தப்பட வேண்டிய ஒன்று அது நன்கொடை அல்ல! குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு! வரிஏய்ப்பு செய்வது தேசத்துரோகம்!
சினிமாவில் சமூகநீதிக்குப் பாடுபடுவது போல் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் நிஜத்திலும் அப்படி இருக்க வேண்டும்! ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது; ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்!
வெளிநாட்டு சொகுசு காருக்கு உரிய வரியை இரண்டு வாரங்களுக்குள் அரசிடம் செலுத்த வேண்டும்! ஒரு லட்சம் அபராதத்தை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று, நீதியரசர் S.M.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
நீதிமன்றம் அளித்த உத்தரவு விவரம்
சொகுசு கார்கள் பல இருந்தும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்கு அளிப்பதற்காக நடிகர் விஜய், சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. ஜிஎஸ்டி வரி குறித்து தனது சினிமாவில் விலாவாரியாகப் பேசும் விஜய், ஒழுங்காக நாட்டுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கூடக் கட்டாமல், அதற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடியதே மிகக் கேவலமானது என்று சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.