தலைவாசல் விஜய் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் நெஞ்சங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் தலைவாசல் விஜய். இவர் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாகவும், மனதில் பதியக்கூடியதாகவும் இருக்கும்.
சாமானிய மனிதனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய். ஒரு பக்கம் குடும்பம், மற்றொரு பக்கத்தில் மனதில் பதியமிட்ட சினிமா ஆசை. இரண்டிலும் சமமாக பயணம் செய்து இன்று உச்சத்தை எட்டியுள்ளார் தலைவாசல் விஜய்.
1992ம் ஆண்டு தலைவாசல் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா கனவை நினைவாக்கினார்.
அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவாசல் விஜய் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வருகிறார்.
தேவர் மகன், மகாநதி, மகளிர் மட்டும் என எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் கனகச்சிதமாக பொருந்தி நடித்து வெற்றி வாகை சூட்டி வருகிறார் தலைவாசல் விஜய்.
மலையாள திரைப்படமான யுகபுருஷன் திரைப்படத்தில் நாராயண குரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் யுகபுருஷன். நாராயண குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தது பெருமையான ஒன்று எனவும்,
மேலும் அந்த படத்தின் படப்பிடிப்புக்கு 4 மணி நேரம் மேக்கப் போடப்படும். அந்த திரைப்படம் மலையாள திரை உலகில் தன்னை அடையாளப்படுத்தியது என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் யுகபுருஷன் பெற்றுத்தந்தது நெகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
இந்த விருது அறிவிக்கப்பட்ட போது எல்லை இல்லா மகிழ்ச்சியாக இருந்தது, மகிழ்ச்சியில அழுதேன். என் மனைவியும் கண் கலங்கினார். என் அப்பா, என்னை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என்றுக் கூறினார். அந்த தருணம் மிகவும் இனிமையான தருணமாக இருந்தது.
அதே சமயம் தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்திருந்தும் விருது வராததிற்காக பீல் பண்றேன், இப்போ வரைக்கும் பீல் பண்ணிட்டு இருக்கேன். ஆனால் நிச்சயம் வருங்காலங்களில் விருதை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
பாலிவுட் படங்களிலிலும் கலக்கி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.