[prisna-google-website-translator]

அரசியல் செய்ய தமிழ்! பணத்தை அள்ளி குவிக்க அயல் மொழி!

arulnirhi - 1

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் கருணாநிதி. அவருடைய பேரன்கள் உதயநிதி, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள்.

கருணாநிதி முதல்வராக இருந்த போது திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்தார்.

அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் அனைவருமே தமிழில் மட்டுமே பெயர் வைத்தார்கள். ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விலக்கு என்பது இல்லாமல் போய்விட்டது.

அதனால், மீண்டும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழித் தலைப்புகள் தமிழ் சினிமாவில் அதிகமாகிவிட்டது. தற்போது கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வரான பிறகு, தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் மூன்று படங்களுக்கு வேற்று மொழிகளில் தலைப்புகளை வைத்துள்ளார்கள்.

அவர் தற்போது நடித்து வரும் ஒரு படத்தின் பெயர் ‘டைரி’. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியானது.

அதில் ஒரு படத்தின் பெயர் ‘டி பிளாக்’, மற்றொரு படத்தின் பெயர் ‘தேஜாவு’. இதில் ‘தேஜாவு’ என்பது பிரெஞ்சு மொழி. அருள்நிதி தன்னுடைய படங்களுக்கு இப்படி வேற்று மொழிகளில் பெயர் வைக்கலாமா, என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply