சித்திரம் பேசுதடி படத்தை நடிகர் விஜய்க்காக தான் எழுதினேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குநர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “சித்திரம் பேசுதடி பிரிவியூ ஷோக்கு வந்த நடிகர் விஜய், அந்த படத்தை பார்த்துவிட்டு, ‘அண்ணா. எனக்கும் இந்த மாதிரி படம் ஒன்று பண்ணுங்க’ என கேட்டார்.
உடனே நான் இந்த படமே உங்களுக்காகதான் எழுதுனது என அவரிடம் கூறினேன். உடனே என் கழுத்தை பிடிச்சு, ஏன் எங்கிட்ட சொல்லல? என கேட்டார். அதற்கு, நான் சொல்லியிருப்பேன் விஜய்.. ஆனால் நீங்க நடிக்கிறதா இருந்தா. உங்க அப்பா ஒரு 18 சீன் மாத்திருப்பாரு, நீங்க ஒரு 18 சீனை மாத்திருப்பீங்க..
நான் தற்கொலையே பண்ணியிருப்பேன். அதனால்தான் வேண்டாம் என முடிவு பண்ணிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
முதல் படமான சித்திரம் பேசுதடி படத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த பெயர் வாங்கியவர் இயக்குநர் மிஷ்கின். 2006 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அந்த ஆண்டில் வெளியான வெற்றி படங்களில் ஒன்றானது.
அதற்கடுத்து அவரது படைப்பில் வெளியான அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்கள் திகிலுடன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
விஜய்க்கு கத சொன்னா 18 சீன மாத்த சொல்லுவாரு 🙏😂
நான் தற்கொலையே பண்ணிருப்பேன் – மிஸ்கின் #Valimai pic.twitter.com/yhJeWyhoRr
— Rᴅx_Sᴜɴᴅᴀʀツ🔥™ (@Itz_Rdx2) July 23, 2021