மாஸ்டர் பட ரீமேக்கில் நடிப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் முழுக்கதையையும் கேட்ட பிறகு திருப்தியில்லை என விலகி விட்டதால் அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய நிறுவனம் சிக்கலில் உள்ளது.
தமிழ் சினிமா மற்றும் திரையரங்குகளை மீட்டெடுக்கும் சூழ்நிலையில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். மாஸ்டர் படத்தைப் பார்த்த திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா, மாட்டார்களா என்ற சந்தேகத்தில் ஒருவழியாக படம் வெளியானது.
அந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை விட வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது தான் ஆச்சரியமே.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வேற லெவலுக்கு சென்றுவிட்டார். ஊரடங்கு சமயத்தில் ஒரு படம் கூட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 26 படங்களுக்கு பல கோடிகளில் அட்வான்ஸ் வாங்கி குவித்துள்ளார் விஜய் சேதுபதி.
இப்படி இருக்கையில் மாஸ்டர் படத்தின் வெற்றியைப் பார்த்த பாலிவுட் நிறுவனம் ஒன்று அந்த படத்தை இந்தியில் சல்மான்கானை வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டது. சல்மான் கானும் ஹிந்திக்கு ஏற்றபடி கதையை மாற்றினால் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார்.
ஆனால் மாஸ்டர் கதையை ஹிந்திக்கு ஏற்றபடி மாற்றம் செய்ததில் சல்மான்கானுக்கு பெரிய அளவு திருப்தி இல்லையாம். அதன் காரணமாக மாஸ்டர் ரீமேக்கில் நடிக்க முடியாது என விலகிக் கொண்டாராம். இதனால் வேறு யாரை நடிக்க வைப்பது என்று பல குழப்பத்தில் தடுமாறி கொண்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.