
தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். உதவி என்று வருபவர்களுக்கு, ‘இல்லை’ என்றே கூறுவது இல்லை.
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றால் அவரின் நல்ல குணம் தான் காரணம்.
தற்போது வலிமை படத்தின் சூட்டிங் எல்லாம் முழுவதும் முடித்துக்கொண்டு ஆக்ரா வரை பைக்கில் பயணம் செய்து தாஜ்மஹால் சென்றிருக்கிறார் அஜித். அங்கு ஒரு ரசிகர் தயங்கியபடி போட்டோ கேட்க ‘வாங்க வாங்க’ என்று கட்டித் தழுவியபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Recent video of Thala Ajith ❤️🤩 #Thala #Ajithkumar #Valimai pic.twitter.com/lZ0920VPp5
— TRENDS AJITH (@TrendsAjith) September 19, 2021
Related
Source: Dhinasari News – Vellithirai News