பைக்கில் உலகை வலம் வந்த பெண்ணை சந்தித்த ‘தல’! வைரல்!

ajith Maral Yasarloo
ajith Maral Yasarloo

நடிகர் அஜித் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் பைக்கரைச் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அஜித் அதை அடுத்து ரஷ்யாவில் 3500 கிலோமீட்டர் பைக் சுற்றுப்பயணம் சென்றதாகக் கூறப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற BMW பைக் சோதனை சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

தற்போது அஜித் மரால் யசார்லூ என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் பைக்கரை சந்தித்துள்ளார். அவரிடம் உலகம் முழுதும் பைக்கில் சுற்றி வர திட்டமிட்டுள்ள அஜித் அவரிடம் அதற்கான யோசனைகளை கலந்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

Maral Yasarloo
Maral Yasarloo

மரால் யசார்லூ பைக்கில் உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். அவர் உலகில் 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பார்த்துள்ளார். திருமணம் ஆன பிறகும் கூட அவர் தனியாக பயணம் செய்துள்ளார்.

அதற்கும் மேல் கர்ப்பமாக இருந்த போது கூட மரால் உலகத்தை சுற்றி வந்துள்ளார். இதுவரை 11000 கிலோமீட்டர் வரை பைக்கில் பயணம் செய்துள்ளாராம்.

இவரை தில்லியில் சந்தித்துப் பேசி அஜித்குமார் அவரிடமிருந்து பல நாடுகளில் பைக்கிள் சென்ற அனுபவத்தை கேட்டறிந்தார்.

ajith 5
ajith 5

மேலும் பைக்கில் உலகை சுற்றும் ஒரு திட்டத்தையும் போட்டுள்ளார் அஜித். இந்தப் புகைப்படத்தை அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்றது. அங்கு வில்லன்களுடன் அஜித் மோதும் சேசிங் சண்டை காட்சியை படமாக்கினர்.

படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். ஆனால் அஜித் ரஷியாவிலேயே தங்கி பைக்கில் சுற்றி பார்க்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

தற்போது மாரல்வுடன் அஜித்தின் சந்திப்பு, அவர் ஒரு மிகப்பெரிய பைக் ட்ரிப்பிற்கு ரெடியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

அஜித் தற்போது மராலை சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply