23 ஆண்டுகள் கழித்து கண்ட பெண்! சுரேஷ் கோபியை அணைத்து உருக்கம்!

suresh kopi 1
suresh kopi 1

கேரளாவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் வீசப்பட்ட பெண்ணை, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் சந்தித்த போது அப்பெண் கட்டியணைத்து அழுது நெகிழ்ந்தார்.

பாலக்காடு மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது.

அந்தக் குழந்தையை ஒரு கும்பல் பிச்சை எடுக்க வைத்ததைக் கண்ட சமூக ஆர்வலர் ஜோஸ் மாவேலி, நண்பர்களின் துணையுடன் மீட்டு காப்பகத்தில் சேர்த்தார். இதையறிந்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, குழந்தையை நேரில் சந்தித்து உதவிகளைச் செய்தார்.

இவையெல்லாம் நடந்து முடிந்து 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சுரேஷ்கோபி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாலக்காடு சென்றிருந்தார்.

அவரால் உதவி பெற்ற அந்தப் பெண் குழந்தை, வளர்ந்து மணம் முடித்து வாழ்வதை அறிந்த சுரேஷ்கோபி, அவரை நேரில் சென்று சந்தித்தார். சுரேஷ் கோபியை நேரில் பார்த்ததும் அந்தப் பெண் பாசத்தில் நெகிழ்ந்துபோய் கட்டி அணைத்து கண்கலங்கினார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply