
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர்
இதன்பின் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவே, வைபவுடன் இணைந்து மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்தார்.
இப்படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. அதன்பின் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய்யின் மாஃபியா ஆகிய படங்களில் நடித்தார். இதில் தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது இவர் கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன. இதில் அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாணுடன் ‘ஓமணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இது தவிர சிம்புவுடன் பத்து தல, தனுஷுடன் திருச்சிற்றம்பலம், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ஓமணப்பெண்ணே படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் ஆகும்.
இது 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் சிறந்த படத்திற்கான தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார்.
அவ்வாறு சமீபத்தில் ஒட்டு புகைப்படத்தை பதிவு செய்து கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். இதோ அந்த கவிதை.
அவ்வளவு இருட்டில் உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை.
இன்னும் வேண்டும் என்ற என் பேராசை, பெருநிலவின் வெளிச்சத்தையும் சேர்த்துக் கொண்டு வளர்கிறது.
தனிமையில் உன் மார்பில் முகம் புதைத்து கரைய புதிய கவலைகள் எதுவும் இல்லை என்னிடம். இன்று உன்னுள் புதைக்க இந்த முகத்தில் புன்னகை மட்டுமே இருக்கிறது.
வேறெந்த வார்த்தையும் தேவையில்லை.
உன் கண்களில் நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்.

Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply