[prisna-google-website-translator]

விஷாலுடன் நின்ற திருமணம்.. வேறொருவருடன் முடிந்த காரணம்..?

Vishal
Vishal

நடிகர் விஷாலுடன் திருமணம் நிச்சயம் செய்துகொண்ட நடிகை அமெரிக்காவைச் சேர்ந்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டுள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 மே மாதம் நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை இருவரும் பரஸ்பரமாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு, தகவலை உறுதி செய்தனர்.

நடிகை அனிதா ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரியளவில் இவர் வளர முடியவில்லை என்றாலும், தெலுங்கு சினிமாவின் முக்கிய புள்ளி ஒருவருடைய குடும்பத்தச் சேர்ந்தவர் என்கிற விபரங்கள் அப்போது வெளியாகின.

விஷால் – அனிஷாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட அதேநாளில், திருமண தேதியும் முடிவானது. அதன்படி 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் திடீரென தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விஷாலுடன் நிச்சயத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை அனிஷா நீக்கினார்.

இதனால் உறுதிசெய்யப்பட்ட திருமணம் நின்றுபோனதாக பேச்சுக்கள் எழுந்தன. அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை, இதுவரை விஷாலுக்கும் அனிஷாவுக்கும் திருமணம் நடைபெறவில்லை.

இந்நிலையில் பிரபல யூ-ட்யூப் சேனலில் விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் நடிகை அனிஷாவுக்கும் விஷாலுக்கும் உறுதி செய்யப்பட்ட திருமணம் நின்றுபோனதாகவும், தற்போது அனிஷாவுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகவும் ஜி.கே ரெட்டி தெரிவித்துள்ளார்.

எனினும் விஷால் – அனிஷா திருமணம் தடைபட என்ன காரணம் என்பதை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply