
ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுமைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ், இளம் நடிகர்களான துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.
துபாய்க்கு சென்று நேரடியாக இந்த விசாவை பெற்று வந்துள்ளார் மீரா ஜாஸ்மின்.
கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மீரா ஜாஸ்மின். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கவுள்ள இந்தப்படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.
Related
Source: Dhinasari News – Vellithirai News