அஜித்துடன் நான் செலவழித்த நாட்கள்.. நடிகை பெருமிதம்!

valimai ajith - 1

நடிகர் அஜித் ரொம்பவே ஸ்டைலான மனிதர் என வலிமை பட நடிகை ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திகேயா கும்மகொண்டா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராஜ் அய்யப்பா, யோகி பாபு, குர்பானி, புகழ், அச்சியூத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறார். போனி கபூர் ஏற்கனவே அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார்.

வலிமை படத்தில் அஜித்தின் கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் எக்ஸ்குளுஸிவ் போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு டிக் டாக் பிரபலமான வைஷ்ணவி சைதன்யாவும் வலிமை படத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வைஷ்ணவி சைதன்யா.

அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள வைஷ்ணவி சைதன்யா, அவரது முகத்தில் உள்ள அழகைப் பாருங்கள். வலிமை திரைப்படத்தில் தல அஜித் சார் உடன் நான் செலவழித்த நாட்கள் இன்னும் என் வாழ்வின் மிக நல்ல நாட்களில் ஒன்றாகும். மிகவும் ஸ்டைலான ஆண் என்று அஜித்தை குறிப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார் வைஷ்ணவி சைதன்யா.

vaishnavi
vaishnavi

இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply