மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் தனது 40வது வயதில் சற்றுமுன் காலமானார்.
திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை உமா மகேஷ்வரி.’ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
தமிழில் வெற்றி கொடிகட்டு படத்தில் முரளியின் தங்கையாக நடித்திருப்பார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, உன்னை நினைத்து போன்ற படங்களிலும் நடித்தார். விஜய் டிவியிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.
கால்நடை மருத்துவமரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
விஜய் டிவி.,யில் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெட்டி ஒலி சீரியலில் லீலா கேரக்டரில் நடித்த வனஜா, உமா மகேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரி ஆவார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், சொந்தமாக பிசினஸ் செய்து வந்தார்.
அதோடு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.
இந்நிலையில் உமா மகேஸ்வரி இன்று காலமானார். அவருக்கு வயது 40. கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.