உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெறுவதற்காக கிழக்கு கடற்கடை சாலையில் உள்ள பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக நெடுநேரம் காத்திருந்தனர்
இதில் ஒரு பெண் மயக்கமடைந்ததால், அவர் கணவர் மன்றத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றார்.
அதன்பின்னரும் விஜய் வெளியே வராததால் தங்களை விஜய் சந்திக்க வேண்டும் அவரது வீட்டு முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பின்னரே விஜய் வெற்றி பெற்றவர்களை தனித்தனியாக சந்தித்து வாழ்த்து கூறினார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இரண்டு தலைவர்கள் துணை 12 தலைவர்கள்வெற்றி பெற்று உள்ளார்கள். மற்றவர்கள் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நடிகை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் விஜய் வீட்டிற்கு சென்றனர். அங்கே விஜய் வீட்டின் கதவுகள் நெடு நேரம் வரைக்கும் திறக்கவில்லை .
விஜய் வந்து தங்களை சந்திப்பதற்காக சாலையில் நெடு நேரம் வெற்றிபெற்றவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். இதில் ஒரு பெண் மயங்கி விழுந்துவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார் பெண் நிர்வாகி ஒருவர்.
அவருக்கு பதிலாக அவரது சகோதரர் எழில் தனது மனைவியுடன் விஜய்யை பார்த்து பார்த்து வாழ்த்து பெறுவதற்காக வந்திருந்தார். நீண்டநேரம் காத்திருந்த நிலையில் மனைவி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து ரசிகர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து தண்ணீர் குடிக்க வைத்து உட்கார வைத்தார்கள்.
அதன் பிறகும் நீண்ட நேரம் வரைக்கும் விஜய்யும் வரவில்லை மாநில பொறுப்பாளர்களும் வெளியே வந்து விசாரிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எழில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு சென்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் விஜய் வராததால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் நேரம் கழித்துதான் விஜய் சந்தித்தார் .
விஜய்யும், ரசிகர் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் இருவரும் வெற்றி பெற்றவர்களை சந்தித்தார்கள்.