
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடனமாடிய நாட்டுக்கூத்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இருவரின் மின்னல் வேக நடனம் மொழி தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

இந்தநிலையில் சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் இந்த பாடலை அவர் ஆடிய பல படங்களில் இருந்து விரைவான நடன அசைவுகளை ஒன்றாக கோர்த்து, ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
அச்சு அசலாக புனித் ராஜ்குமாருக்காகவே உருவாக்கப்பட்ட நாட்டுக்கூத்து போன்று இந்த பாடல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.
#ಹಳ್ಳಿನಾಟು ft PowerStar⚡@PuneethRajkumar❤️#PuneethRajkumar #KingAPPU pic.twitter.com/lOHjtOtagV— Pramod⚡ (@_PramodAppu1) November 21, 2021
[embedded content]