அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித்.
இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் தான் வலிமை. வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் சமயத்தில் அவரே நேரில் தரிசனம் கொடுத்துவிட்டார்.
சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்தாலே ரசிகர்களுக்கு சந்தோசம் தான். அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ரசிகர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.
தமிழில் சிலப்படங்களே இயக்கினாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்தவர் தான் வினோத். இவரது இயக்கத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் படமாக வலிமை உள்ளது. சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில் அஜித் ஒரு வீலில் ரேஸிங் செய்து கீழே விழுகிறார். ஆனால் மீண்டும் எழுந்து வண்டியை ஓட்ட தொடங்குகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதை பார்த்த பலரும் அஜித்தை பாராட்டினாலும்,சிலர் இவ்வாறு செய்வது தவறு,உங்கள் ரசிகர்களும் இதனை செய்வார்கள் என்று பதிவிட்டு வந்தனர்.
ஆனால் அஜித் ரசிகர்களுக்கு எந்த அப்டேட் வந்தாலும் அதனை பொக்கிஷமாகவே பார்க்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் அஜித் வங்கிக்கு வந்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதிலும் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவலில் இருக்கின்றது.
ரசிகர்கள் நடிகரிடம் செல்பி எடுக்க விரைந்தனர். எப்போதும் போல் நடிகர் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் சில படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவரது புதிய தோற்றம். அஜித் நீல நிற ப்ளேசர் அணிந்து, ஒரு ப்ரோ போல் தனது பியர் சால்ட் ஹேர்ஸ்டைலில் இருந்தார். அடர்ந்த தாடியையும் வளர்த்து புதிய தோற்றத்தில் முற்றிலும் ஸ்டைலாகத் தோன்றினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளை தாடியுடன் சுற்றிலும் ரசிகர்கள் என்று மாசாக நிற்கிறார் அஜித். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
வலிமை படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு, அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை சந்தோஷமாக கொண்டாடிவருகின்றனர். தினமும் ஒரு அப்டேட் கொடுத்து வலிமை படத்திற்கு இன்னும் வலிமை சேர்கிறார் அஜித்.