போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 6.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.
போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர்.
ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏற்கனவே தல அஜித்தும் யுவன் சங்கர் ராஜாவும் தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்டபார்வை ஆகிய ஏழு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த ஏழு படங்களின் இசையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வலிமை பட ஆல்பத்தின் மூன்றாவது சிங்கிளாக படத்தின் தீம் மியூசிக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியான விசில் தீம் கவனம் ஈர்க்கிறது. தொடக்கத்தில் புயல் வருவதற்கு முன்பு வரும் அமைதியான காற்றுபோல மென்மையாக ஒலிக்கும் விசில் தீம், அஜித்தை காட்டியதும் புயல் வேகம் போல் இசையிலேயே மிரட்டலைக் கொடுக்கிறது. வழக்கம்போல, அஜித்தின் பைக் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் அதிரடியான இசையையே வழங்கியுள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள்.
தீம் வெளியான சில மணி நேரத்தில், 6,46,665 பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.