ஜகமே தந்திரம் பட பாடல் வீடியோ வெளியீடு – தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…

jagame

பீசா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. மே மாதமே வெளியாகவேண்டிய இத்திரைப்படம் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் வெளியாகவில்லை. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி பாடல் வீடியோவை தீபாவளி விருந்தாக நவம்பர் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply