வலிமை படத்தை பார்த்த பாலிவுட் பிரபலம் படம் பற்றி மிரட்டலான கருத்தை கூறியுள்ளார்.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு ‘வலிமை’ படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மற்றும் வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவில் அஜித் செய்த பல சாகச காட்சிகளும் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் வலிமை படத்தை பார்த்த பாலிவுட்டின் சினிமாபிரமுகரும், முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி படம் பற்றி முகநூலில் மிரட்டலான விமர்சனம் செய்துள்ளார்.
அதில், ஆகாஜ் அஸா ஹாய் தோ அஞ்சாம் கைசா ஹோகா ! ஜீ ஸ்டுடியோவின் பான் இந்தியா குழுவுடன் நாங்கள் படத்தைப் பார்த்தோம், படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்.. ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் & மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை, வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்க போகிறது. ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும்.
புஷ்பா படம் ஆரம்பம் என்றால், வலிமை க்ளைமாக்ஸாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ் – தெலுங்கு – கன்னடம் – இந்தி …!!!” என குறிப்பிட்டுள்ளார்.
வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர்.
வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படம் வெளிவருவதற்கு முன்பே இவ்வளவு பாசிட்டிவ் கமெண்டுகள் வருவதால் தற்போது அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.