அஜித்தின் அசத்தலான வலிமை புகைப்படங்கள்! வைரல்!


valimai ajith - Dhinasari Tamilvalimai ajith - Dhinasari Tamil

அஜித்தின் வலிமை படத்திலிருந்து வெளியான அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் மாஸ் வைரலாகி வருகிறது.

ajith5 - Dhinasari Tamilajith5 - Dhinasari Tamil

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை.

ajith7 - Dhinasari Tamilajith7 - Dhinasari Tamil

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ajith8 - Dhinasari Tamilajith8 - Dhinasari Tamil

இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ajith1 - Dhinasari Tamilajith1 - Dhinasari Tamil

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ajith6 - Dhinasari Tamilajith6 - Dhinasari Tamil

இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ajith 2 - Dhinasari Tamilajith 2 - Dhinasari Tamil

ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில், வலிமை படத்தை மதுரையில் உள்ள அனைத்து திரையரங்கிலும் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ajith4 - Dhinasari Tamilajith4 - Dhinasari Tamil

இதுதவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ajith2 - Dhinasari Tamilajith2 - Dhinasari Tamil

வலிமை படத்திலிருந்து வெளியான Glimpse 1 மில்லியன் லைக்குகளை கடந்து பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ajith3 - Dhinasari Tamilajith3 - Dhinasari Tamil

இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்திலிருந்து வெளியான அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் மாஸ் வைரலாகி வருகிறது.. ஒவ்வொரு கிளிக்கையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply