திருப்பதியில் தரிசனம்: சேலையில் ஒயிலாக மயிலின் மகள்.. வலைதளத்தில் உலாவரும் புகைப்படம்!


janvi kapoor - Dhinasari Tamiljanvi kapoor - Dhinasari Tamil

தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். இவரது தந்தை போனிகபூர் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார்.

janvi 3 - Dhinasari Tamiljanvi 3 - Dhinasari Tamil

ஜான்வி கபூர் திரைக்கு வரும் முன்பே கலிபோர்னியாவில் நடிப்புக்கான படிப்பை முடித்து இருந்தார். கடந்த 2018ல் தடாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதித்தார். தனது தந்தையின் தொழிலிலும் அவர் பங்காற்றி வருகிறார்.

இப்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ரீமேக்கான ‘குட்லக் ஜெர்ரி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ளார். அடுத்து மலையாள ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்கான ‘மிலி’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

janvi 1 - Dhinasari Tamiljanvi 1 - Dhinasari Tamil

நிறைய வெப்சீரிஸ்களுக்கு ஸ்டாரிங் செய்து வரும் ஜான்வி கபூர் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

மேலும், இவர் பிரபல ஜிம்முக்கு செல்லும் பொழுது ரசிகர்கள் இவரது வீடியோவை அதிகாரமற்ற முறையில் அடிக்கடி வெளியிட்டு வருவார்கள்.

janvi 2 - Dhinasari Tamiljanvi 2 - Dhinasari Tamil

ஸ்ரீதேவிக்கு எப்படி நிறைய ரசிகர்கள் இருந்தார்களோ? அதே போலவே ஜான்வி கபூருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதிக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு சில மணித்துளிகளிலேயே பல லட்சம் லைக்குகள் விழுந்துள்ளது.

janvi - Dhinasari Tamiljanvi - Dhinasari Tamil

இந்நிலையில் நடிகை ஜான்விக்கு 25வது பிறந்தநாள். இதையடுத்து தனது தோழிகளுடன் அவர் திருப்பதி சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், தோழிகளுடன் திருப்பதி வளாகத்தில் அமர்ந்தபடி, புடைவை கட்டி புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதற்கிடையே இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஜான்விக்கு பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply