பீகாரில் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் -பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணிக்கும், நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
காலை முதல் பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக, நிதிஷ்குமார் – பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சியைமைக்க தேவையான 122 இடங்களுக்கும் மேல் அக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது மகா கூட்டனி 104 இடங்களிலும்,தேசிய ஜனநாயக கூட்டணி 129 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் 243 சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. இதில் 122 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.