அஜித் கன்னத்தை பிடித்து கிள்ளணும் போல இருந்தது: பிரபல நடிகை!


ajith8 - Dhinasari Tamilajith8 - Dhinasari Tamil

தமிழ் சினிமாவில் அக்கா, அண்ணி , அம்மா என துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தமிழ் செல்வி

இவரின் எதார்த்தமான நடிப்பு பலரின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் . விஜய் , அஜித், சூர்யா என அனைத்து முன்னணி படங்களிலும் தமிழ்செல்வி நடித்து வருகிறார்.

தற்போது விஜய் 62 படத்தில் நடித்துவரும் தமிழ் செல்வி , வேதாளம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

tamil selvi - Dhinasari Tamiltamil selvi - Dhinasari Tamil

அதில் ‘நான் வேதாளம் படம் பண்ணும் பொழுது எல்லோரும் அவர் கூட புகைப்படம் எடுத்தாங்க. எனக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு ஆசை இருந்தது. ஆனால் எனக்கு நாம போய் எடுத்தா தப்பா நினைப்பாங்களா? , நாம ஒரு நடிகையாச்சே போனா ஏதாவது நினைப்பாங்களா என அவ்வளவு ஓடியது.

அவர் எவ்வளோ பெரிய ஆளு தலைக்கனமே இல்லாம ஃபோட்டோ எடுத்துக்கிட்டாரு. படத்துல அஜித் சாரை கத்தியால குத்தி, ஸ்ட்ரெக்‌ஷர்ல எடுத்துட்டு வருவாங்க. அவருடைய தலை என் பக்கத்துல இருக்குற மாதிரி சீன் இருக்கும்.

பாக்குறதுக்கு மொழு மொழுன்னு இருக்காரு. பூபாலன் சார் இருந்தாரு , அவர்க்கிட்ட கன்னத்தை கிள்ளனும் போல இருக்குனு சொன்னேன். கிள்ளிக்கோ ஒன்னும் சொல்ல மாட்டாருனு சொன்னாரு .

அப்போ மொட்டை அடிச்சிருந்தாரு. மேக்கப்பே போடமாட்டாரு. எப்போதுமே முகத்தை கழுவிட்டு வந்து நிப்பாரு. அவர் ஸ்கின்னே நல்லா இருக்கும். மொட்டை போட்டதுக்கும், லைட்டிங்கிற்கும் எப்படி இருந்தார் தெரியுமா. ரொம்ப அழகா இருந்தாரு.

சின்ன சின்ன ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கெல்லாம் மரியாதை கொடுப்பாரு. ஸ்ட்ரெக்சர்ல படுத்துட்டு இருக்க சீன் எடுக்கும் பொழுது , ஒரு மணி நேரம் ஆச்சு . அப்போ அதே பெட்லதான் படுத்திருந்தாரு.

பூச்சியெல்லாம் பறக்குது . ஆனால் அதையெல்லாம் கண்டுக்காம கேம் விளையாடிட்டு இருந்தாரு. அவர் நினைச்சிருந்தா கேரோவன் போய் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்.

ஆனால் வேர்த்துட்டு இருந்துச்சு அங்கேயேதான் இருந்தாரு. லஷ்மி மேனனுக்கு கேம் விளையாட சொல்லிக்கொடுத்துட்டு இருந்தாரு’ என தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை தமிழ் செல்வி .

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply