வலிமை படத்திற்கு எதிர்மறையாக அதிக விமர்சனங்கள் வெளியாகி வருவதை அடுத்து மீண்டும் தனது கருத்தை நினைவுபடுத்தியுள்ளார் அஜித்.
நடிகர் அஜித் கோலிவுட்டின் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவருக்கு தமிழகம் முழுவதும் இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
எனவே அவரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். அப்படி 2 ஆண்டுகள் தீவிர காத்திருப்பிற்கு பின் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது.
படத்தில் ரேஸ் காட்சிகள் வெறித்தனமாக இருந்தன. ஆனால் பேமிலி செண்டிமெண்ட் முழுவதுமாக ஒர்கவுட் ஆகவில்லை என்பதே பலரின் கருத்து. மேலும் அஜித் ரசிகர்களுக்கே படத்தில் முழு திருப்தி இல்லை.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த எச்.வினோத், “மக்கள் தற்போது ஷாட்ஸ், ரீல்ஸ் விடீயோக்கள் பார்த்து நிதானம் இழந்துவிட்டனர்.” என்றார். இதையடுத்து வலிமை படத்தில் இருந்த சிறிய தொழில்நுட்ப குறைபாடு முதற்கொண்டு ஆராய தொடங்கிவிட்டனர்.
இப்படி வலிமை படத்திற்கு எதிர்மறையாக அதிக விமர்சனங்கள் வெளியாகி வருவதை அடுத்து அஜித் திரைத்துறையில் தனது 30 ஆண்டுகள் நிறைவுக்கு தெரிவித்த கருத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.
“ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். நான் ரசிகர்களிடமிருந்து வரும் அன்பு, வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்புகள் மற்றும் சீரான முறையில் வரும் நடுநிலையாளர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். வாழு வாழ விடு. எப்போதும் உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
தற்போது அதை மேற்கோள் காட்டி “சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு நினைவூட்டல். எப்போதும் நிபந்தனையில்லா அன்புடன் அஜித் குமார்” என்று தெரிவித்துள்ளார்.
A reminder to whom so ever it may concern.
Unconditional love always – AK ❤️🏁 pic.twitter.com/AM2Kh0I9Pq— Suresh Chandra (@SureshChandraa) March 14, 2022