இப்படித்தான் இருக்கணும்.. அஜித் போட்ட கண்டிஷன்கள்!


போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் அஜீத் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வலிமை திரைப்படம் போல் நீண்ட காலம் இழுக்காமல் மிகக்குறுகிய காலத்திலேயே வெளியிட தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது.

இதனால் அஜீத் இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார். அந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. வலிமை திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் அஜித்துக்காக இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.

அந்த பாடல்களால் கவரப்பட்ட அஜித் விக்னேஷ் சிவனுக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார். இதனால் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் அஜீத் இந்த படத்தில் இரண்டு கண்டிஷன்கள் போட்டிருக்கிறாராம்.

அது என்னவென்றால் இந்த படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும் எந்த இடத்திலுமே வரக்கூடாது என்பதுதான். எனக்கு மட்டுமல்ல படத்தில் இருக்கும் எந்த கேரக்டருக்கும் அரசியல் டச் இருக்கக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

ஏனென்றால் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அரசியல் கட்சிகளால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனால்தான் அவர் இப்படி ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அடுத்து இரண்டாவது கண்டிஷன் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

வலிமை திரைப்படத்தில் கூட அம்மா சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோன்று இதற்கு முன்பு விசுவாசம் திரைப்படத்தில் அப்பா மகள் சென்டிமென்ட் காட்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது.

இதனால்தான் அஜித் எல்லாவிதமான ஆடியன்ஸையும் கவர் செய்வதற்காக இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். இதனால் விக்னேஷ் சிவனும் அஜித் கூறியது படியே கதையை தயார் செய்யும் முயற்சியில் இருக்கிறார்.

அதேபோல் அஜித்தின் முந்தைய படங்கள் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என வி சென்டிமெண்ட் படங்களாகவே வெளியானது. இதனால் வலிமை படத்திற்கும் வி யில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அஜித் விடாப்பிடியாக இருந்துள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தின் டைட்டிலை பற்றி வினோத் மற்றும் போனிகபூர் இருவரும் பேசி உள்ளனர்.

இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் சாத்தானின் குழந்தை. இந்தப் பெயர் அவ்வளவாக நல்லா இல்லை என்று பெயரை மாற்றும்படி முதலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் அஜித்திற்கு ஏற்ற வி டைட்டிலில் வைக்கும்படி போனி கபூர் வினோத்திடம் கூறியுள்ளார். அதன்பிறகு இப்படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டது.

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலுக்கு அஜித் வி சென்டிமென்ட் பார்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்தகட்டமாக தியேட்டர்களை தொடர்ந்து வலிமை ஓடிடியிலும் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக வெளிவந்திருக்கும் அறிவிப்பின்படி, `வலிமை திரைப்படம், மார்ச் 25ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும்’ என ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

படம் எப்படி பல்வேறு மொழிகளில் வெளியானதோ, அதேபோல ஓடிடியிலும் அனைத்து மொழியிலும் படத்தை பார்க்கலாம் என்று மட்டும் ஜீ தெரிவித்திருக்கிறது.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply