[prisna-google-website-translator]

காஷ்மீர் இனப்படுகொலையை மறுப்பவர்கள் பயங்கரவாதத்தின் அங்கம்: இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி!


kashmiri files - Dhinasari Tamilkashmiri files - Dhinasari Tamil

காஷ்மீரில் இனப்படுகொலை நடக்கவில்லை என எதிர்ப்பவர்கள் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப்பாவியாகவோ இருப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்

இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி அரசியல் ரீதியாகவும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம்தான் தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

kasmir files - Dhinasari Tamilkasmir files - Dhinasari Tamil

80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் கொடுமைப்படுத்தப்பட்டு, கொலை, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகியவற்றால் வெளியேற்றப்பட்ட உண்மை சம்பவத்தை இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த படத்துக்கு உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

முதல் 4 நாட்கள் மிகக் குறைவான அளவிலேயே வசூல் செய்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் அதில் இடம்பெற்ற உண்மை சம்பவகாட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்த நாட்களில் அதிகளவிலான திரையரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்த படம் மதவெறியை தூண்டுவதாகவும், தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுகுறித்து இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“காஷ்மீரில் நடந்ததை இனப்படுகொலை என்று சொல்லும் முதல் நபர் நான் இல்லை. இதுகுறித்து விளக்கி இருக்கும் புத்தகங்களை நூலகங்களில் இருந்து அகற்றிவிட்டு வெளியேற்றம் என்ற வதந்தியை பரப்பினர். உண்மையில் இது இனப்படுகொலைதான்.

இனப்படுகொலையை மறுப்பவர் யாராக இருந்தாலும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப்பாவியாகவோ இருப்பார். ” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply